கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன.
தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!
தமிழநாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, தொற்று பரவலை முதலில் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்புகளும், அதிகரிப்புகளும் அதிகரித்தன. குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவ குழு நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிபுணர் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கடந்த சிலவாரங்களாக தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். இது, நல்ல பலனை கொடுத்தது. இதனால், 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொற்று குறையத் தொடங்கின. இதன்காரணமாக கடந்த 7ஆம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் ஊரடங்கு தளவுகளை கொடுக்கப்பட்டது என்று எதற்கு என்று தெரியாமல். கொரோனாவின் பயம் இல்லாமல் பழைய வெளியே சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா காலத்தில் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தேவை குறித்து தொடர்ப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து கூறினர். மேலும், இயல்புநிலை திரும்பியது போல வெளியில் காட்சியளிப்பதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அசவுகரியங்களை குறைக்கவே தளர்வுகள் என்பதை மக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியதற்கு, கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை கடுமையாக நடந்து கொண்டதால் பல இடங்களி பிரச்னை ஏற்பட்டதாகவும், காவல்துறை தற்போது கனிவுடன் நடப்பதை மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அரசு விளக்கமளித்தது.
Tamil Nadu Corona Lockdown: கடை திறக்கலாமா? வண்டி ஓடுமா? கறி கிடைக்குமா? முழு விபரம் இதோ!