தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படுவதாக   சமூக ஊடங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில், தமிழ்நாடு முதலமைச்சர் , " ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் கொரோனா கட்டுப்படுத்த இயலாது என்ற சூழலால், வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுகிறது. பால் விநியோகம், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள், மருந்துக் கடைகள், நாளிதழ் வினியோகம், விளை பொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் நீங்கலாக மற்ற சேவைகள் இருக்காது.  தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள்  பகல் 12 மணி வரை இயங்கலாம். 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்கலாம். சாலையாவ்ரகுள் கடை  மற்றும் பூக்கடைக்கு அனுமதி உண்டு. மளிகை, காய்கறிகள், இறைச்சி, பலசரக்கு கடைகள் தவிர வேற கடைகள் திறக்க அனுமதியில்லை. இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும் என்பது உண்மை தான்" என்று தெரிவித்தார். 


 உண்மை நிலை என்ன? 


ஆனால், மே மாதம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் முழு பொதுமுடக்க நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது, முதல்வர் மு.க ஸ்டாலின்  ஊரடங்கு தொடர்பாக பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமாக இருந்த காரணத்தினால் மே 10 முதல் 24 வரை முழுமையான பொது முடக்க நிலையை முதல்வர் அறிவித்தார். 


Tamil Nadu Complete Lockdown: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு; இரு வாரங்களுக்கு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்      


தற்போது இரவு நேர ஊரடங்கு:   


மாநிலம் முழுவதும் கடந்த 6ம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. 


எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது சில அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும்  அனுமதிக்கப்படும்.  உதாரணமாக, அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 


அதேபோன்று, நாளை (9-1-2022 ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வாசிக்க: 


Role of Night Curfew: கொரோனா இரவு நேர ஊரடங்கு தேவையா? தேவையற்றதா? தரவுகள் சொல்வது என்ன?  


நீட் மசோதா விலக்கு : முதல்வர் தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சி கூட்டம்