திருமண நிதி உதவித்திட்டம் குறித்து தமிழக அரசு விதிகளை அறிவித்துள்ளது. அதாவது யாருக்கெல்லாம் இந்த உதவித்திட்டம் கிடைக்குமென குறிப்பிட்டுள்ளது.
ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் திருமணத்துக்கு உதவி செய்யும் விதமாக அரசு திருமண நிதி உதவித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆட்சி மாறினாலும் இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டே வருகிறது. 1989ம் ஆண்டு கருணாநிதியால் திருமண உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்த நிலையில் ஆட்சிக்கு வந்த அதிமுக, அத்திட்டத்தை மேலும் மெருகூட்டியது. தாலிங்கு தங்கம் என்ற அறிவிப்பை சேர்த்து அறிமுகம் செய்தது அதிமுக.
அத்திட்டத்தின்படி பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50ஆயிரம் ரொக்கம், அதேபோல் பட்டப்படிப்புக்கு கீழ் படிப்புத்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25ஆயிரம் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வசதிப்படைத்தவர்கள் கூட இந்த திட்டத்தில் பயன்பெறுவதாகவும், இதனால் சில ஏழைகளுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமண நிதி உதவித்திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என தமிழக அரசு விளக்கமாக குறிப்பிட்டுள்ளது.
Crorepati: ‛குரோர்பதி’ நிகழச்சி: 25 வயதில் கோடீஸ்வரரான மாற்றுத்திறனாளி பெண்!
யாருக்கெல்லாம் திருமண நிதி உதவி?
திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசு
பணியில் இருக்கக்கூடாது
வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது
மாடி வீடு - நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழக்கப்படாது
திருமண உதவி தொகை வேண்டுமென்றால் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்
திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்
இப்போது பல்வேறு திருமண நிதி உதவி திட்டம் நடைமுறையில் உள்ளன. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்கள் உள்ளன. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்திற்கானது.
Information Today | தகவல் தெரிஞ்சுக்கோங்க! நெடுஞ்சாலைகளில் செவ்வரளி ஏன் தெரியுமா?