நெடுஞ்சாலை பயணங்களில் ஓடும் மேகங்களுக்கு நடுவே கண்ணுக்கு இதமாய் வேகமாய் பின்னோக்கி ஓடும் செவ்வரளியை நாம் பார்த்திருப்போம். இரு சாலைகளின் நடுவே இந்த செவ்வரளி வளர்க்கப்படுகிறது. பலர் சாலைகளின் அழகுக்காகவே இந்த செவ்வரளி வளர்க்கப்படுவதாக நினைத்திருப்பார்கள். ஆனால் சாலையின் நடுவே செடிகள் வளர்க்கப்படுவது வெறும் அழகுக்கான விஷயம் மட்டுமல்ல. அதற்கு பின்னால் பல கதைகள் உள்ளன. அந்த தகவலை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.


Kidney | ஆரோக்கியமான சிறுநீரகம்.. பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் இதுதான்!


சாலையின் நடுவே செடிகள் நடப்படுவதன் முக்கிய நோக்கம் முகப்பு விளக்குகளின் எதிரொளியை தவிர்க்கவே. எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் நேரடியாக ஓட்டுநரை பாதிப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இதை நாம் அனுபவித்தும் இருப்போம். ஆனால் செடிகள் நடுவே இருந்தால் முகப்புவெளிச்சம் நேரடியாக கண்களை கூசாது. ஆனால் நடுவதற்கு பல செடிகள் இருந்தும் செவ்வரளியை நெடுஞ்சாலைத்துறை தேர்வு செய்வது ஏன் தெரியுமா?





இதுதான் காரணங்கள்:



  • காற்றில் உள்ள நச்சுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் செவ்வரளிக்கு உண்டு. இதனால் மாசு அதிகம் உள்ள நெடுஞ்சாலை மாசுக்கட்டுப்பாட்டு வேலையை செவ்வரளி செய்யும்

  • அதிகமாக கவனிக்கக் கூடிய செடி அல்ல செவ்வரளி. அதாவது வறட்சியைத் தாங்கும். ஓரளவுக்கு வேர் பிடித்து வளர்ந்துவிட்டால் எப்படியும் தன்னைத்தானே அது பாதுகாத்துக்கொள்ளும்

  • செவ்வரளியின் அடர்த்தியான வேர் மண் அரிப்பைத் தடுக்கும்


கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் - கண்களை பாதிக்கும் புதிய நோய்.. ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?





  • அதிக அடர்த்தியான இலைகளை கொண்டிருப்பதால் வாகனத்தின் இரைச்சலை செவ்வரளி குறைக்கும். இந்த இலைகளின் அடர்த்தி முகப்பு விளக்கு வெளிச்சத்தையும் கட்டுப்படுத்தும்.

  • விலங்குகள் செவ்வரளியின் இலைகளை உண்ணாது. இதனால் சாலையில் சுற்றும் விலங்குகளினால் இந்த செடிகளுக்கு பாதிப்பு இல்லை.

  • குறிப்பாக செவ்வரளியின் பூ கண்ணுக்கு மிக அழகாக இருக்கும். பூத்துக்குலுங்கும் செவ்வரளி மலர்கள் உங்கள் பயணத்தையே அழகாக்கும்


எதில் கவனம் வேண்டும்?


வறட்சியை தாங்கும் அதே செவ்வரளி மழைக்காலங்களில் சரசரவென வேகமாக வளரக்கூடியவை. கிளைகிளையாய் சாலையை ஆக்கிரமித்து விபத்துக்கு கூட காரணமாக ஆகலாம். அதனால் சரியான அளவில் செவ்வரளியை வெட்டி பராமரிப்பது மிக முக்கியம்.


ப்ளாஷ்பேக்: நடிக்க மறுத்த சீதா..டேட் தர மறுத்த ரேவதி...‛4 ரீலு... 40 நாளு’ பார்முலாவில் பாண்டியராஜனின் ‛ஆண்பாவம்’!