கல்வி வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 10% சிறப்பு இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்பும் தமிழகத்தில் அமல்படுத்தாத திமுக அரசுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் 14-வது மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் கோவை ஸ்ரீ கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.


VidaMuyarchi: ”என்றுமே எங்க தல தான்” .. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ரசிகர்களிடம் அன்பு காட்டிய அஜித்..!




கூட்டத்தில் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட முற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% சிறப்பு இட ஒதுக்கீடு தீர்ப்பை தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது போல் நலிந்த பிராமண சமூகத்தில் முன்னேற்றத்திற்காக தனி நலவாரியம் அமைத்திட வேண்டும், தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மற்ற சமூகத்திற்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது போல முற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும். 


Year ender 2023: 2023 இல் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை யார்? கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யம்!




தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பிராமணர் சமுதாய சம்பிரதாயத்தை கொச்சைப்படுத்தும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை எந்த காலத்திலும் எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் ரத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


Harry Brook: கடைசி ஓவரில் ஹாரி ப்ரூக் அதிரடி, அட்டகாசமான பேட்டிங்..! மேற்கிந்திய தீவுகளை கதறவிட்ட இங்கிலாந்து