முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைமைச் செயலக கோட்டை முகப்பில் தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து பேசிய அவர், “தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக்காற்றைக் கொண்டுதான் நினைவுத்தூண் கட்டப்பட்டது. செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் 150 ஆவது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு வருகிறது. 


அதனை அரசு விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. கார்கில் போர் நேரத்தில் அன்றைய தி.மு.க அரசு 3 தவணைகளாக 50 கோடியை வழங்கியது. இனி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 18,000 ஆக உயர்த்தப்படும். அவர்களின் குடும்ப ஓய்வூதியமும் 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்" என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் விழுப்புரம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எம்.பி. ரவிக்குமார், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் வழங்கப்படும் ஓய்வுதியத்தை உயர்த்த வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.






இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை 16000 ரூபாயில் இருந்து 20000 ரூபாயாகவும்; குடும்ப ஓய்வூதியத் தொகை 8000  ரூபாயிலிருந்து 10000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கவேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் வாசிக்க: Watch Video: புரோட்டாவுக்கு 'சூரி'னா, ஆம்லெட்டுக்கு நான்.! அசால்டாக 50 ஆம்லெட் சாப்பிட்டு ஏப்பம் விட்ட நபர்!


Vadapalani Murugan Temple | வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்! பக்தர்களுக்கு 'நோ’.. நேரலையில் தரிசனம்.!


DMK MP Kanimozhi: பிரிட்டிஷ் அரசை எதிர்த்த முதல் ராணி வேலுநாச்சியார்தான்.. ரஜினி டயலாக்கில் கனிமொழி வெளியிட்ட வீடியோ..!