ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் 72 வயதான நிகோலஸ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி 70 வயதான விரோனிகா கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இன்றைய காலகட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு இட்லி 10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மூதாட்டி விரோனிகா ஒரு இட்லி ரூ. 1.50க்கு மட்டுமே விற்பனை செய்கிறார். அதாவது 2 இட்லி 3 ரூபாய்.


 மூதாட்டி விரோனிகா, காலையில் வேலைக்கு செல்பவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோர் டெலிவரியும் செய்து வருகிறார். அதேபோல், காலையில் அவர் வீட்டிற்கு சென்றால் 10 ரூபாய்க்கு 7 இட்லி சாப்பிடுமாறு எடுத்து வைக்கிறார். 


தனியாக பார்சல் வேண்டும் என்று கேட்டால், பார்சல் தர மறுத்து வருகிறார். இதுகுறித்து ஏன் என்று கேள்வி எழுப்பினாலும் வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மட்டுமே பல வருடமா வீடுதேடிசென்று கொடுத்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.




ஒரு நாளைக்கு 300 ரூபாய் வரை இட்லி விற்பனை செய்து வருகிறார்.இந்த 300 ரூபாய் அடுத்த நாளுக்கு தேவையான அரிசி, பருப்பு, தேங்காய் போன்றவற்றை வாங்க மட்டுமே சரியாக உள்ளது. இதில், லாபம் இல்லை என்றாலும் என் மன நிம்மதிக்காக சமைத்து உணவு பரிமாறுவதாகவும் குறிப்பிட்டார்.


தனது கணவர் பேங்க் ஏடிஎம் ஒன்றில் வாட்சமேன் வேலை வருவதால், அவர் சம்பாரிக்கும் பணத்தை வைத்துகொண்டு குடும்பத்தை ஓட்டுகிறோம் என்றார். 


இதுகுறித்து விரோனிகாவின் கணவர் நிக்கோலஸ் தெரிவிக்கையில், 'முதலில் 50 காசு, 1 ரூபாய் என்று விற்ற இட்லியை தற்போது ஒன்றரை ரூபாய்க்கு சாம்பார் சட்னியுடன் மனைவி விற்கிறார். இந்த இட்லி கடையை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. விரோனிகா இட்லி வியாபாரம் செய்வதை நானும் திருமணமாகி சென்ற எனது 3 மகள்களும் கண்டுகொள்வதில்லை.


 அதிகாலை 3 மணியில் இருந்து பரபரப்பாக வியாபாரத்தில் இறங்கும் என் மனைவி மன திருப்திக்காக இதை செய்வதாக விட்டுட்டோம் என்றார்.


தொடர்ந்து அவர் பேசுகையில்,  ஒரு கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்தேன். ஓய்வுக்கு பின் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தேன். அங்கேயும் கொரோனாவை காரணம் காட்டி சம்பளத்தை நிறுத்திவிட்டனர். ஏதோ வங்கியில் பணிபுரிபவர்கள் மற்றும் இடத்தின் உரிமையாளர் ஆகியோர் இரக்கப்பட்டு கொடுக்கும் பணத்தில் காலத்தை ஓட்டுகிறோம். பலமுறை முயற்சித்தும் எங்களுக்கு முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை. சொற்ப பணத்தில் நாங்களும் சாப்பிட்டு, 3 ஆயிரம் வீட்டு வாடகையும் கொடுத்து காலத்தை ஓட்டுவது கடினமாக உள்ளது என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண