நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஹரிநாடாரை சென்னை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் குறித்து கடந்தாண்டு நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக ஹரி நாடார் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான், ஹரிநாடார், சதா ஆகியோரின் மீதும் திருவான்மீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். வழக்கு தொடர கூட பணம் இல்லாத ஹரி நாடார் தற்போது பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், ஹரி நாடார் எனக்குதான் சொந்தம் என்று அவரது முதல் மனைவி ஷாலினி நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2012 ம் ஆண்டு கேரளாவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்தபோது தனக்கும், ஹரிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சென்னை சென்ற ஹரி நாடார் பைனான்ஸ் தொழிலில் களமிறங்கி கோடி கணக்கில் பணம் சம்பாதித்தார். இதையடுத்து, வசதி வாய்ப்பு வந்ததும் தன்னையும், தன் மகனையும் தனியே தவிக்கவிட்டு, மலேசியாவை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு, மலேசியாவை சேர்ந்த மஞ்சு தன்னை தொடர்பு கொண்டு தான் ஹரி நாடாரின் மனைவி என்றும், எங்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, ஹரி நாடாரை நீ மறந்து விட வேண்டும் என்று மிரட்டினார்.மஞ்சுவின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டுதான் ஹரி நாடார் விவாகரத்து செய்யபோவதாக தெரிவிக்க, அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.
பெங்களூரில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டபோது, அவரது அருகில் மஞ்சு இருந்தார். அப்பொழுது, காவல்துறையினர் மஞ்சுவை ஹரி நாடாரின் மனைவி என்று தவறாக எண்ணி கொண்டனர். இதனால், பெங்களூர் சிறையில் ஹரியை நான் பார்க்க சென்றபோது என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர். எனவே, மஞ்சுவிடம் இருந்து என் கணவர் ஹரியை பிரித்து என்னுடன் சேர்ந்து வாழ வைக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 4 ஆயிரத்து 243 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய ஹரி நாடார் அப்போது பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டார்.
மேலும், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ரோல்ஸ்ராய்ஸ் கார், பென்ஸ், ஆடி மற்றும் ஜாக்குவார் கார்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுமட்டுமின்றி, கடந்தாண்டு திரைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் 2கே அழகானது காதல் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அந்த படத்தில் நடிகை வனிதா கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்