CM MK Stalin: 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ ஆய்வுக் கூட்டம் - பருவ மழையை சமாளிக்க தயாராகுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

CM MK Stalin:’முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03.07.2023) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

’முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ (Iconic Projects) குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03.07.2023) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுமுகங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாகுன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  பருவமழைக்கு முன்பு சாலை, போக்குவரத்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவதால் சாலை, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக முதற்கட்ட ஆய்வுக் கூட்டம் கடந்த மாதம் 16-ம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, 28-ம் தேதி இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, நீர்வளம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை உள்ளிட்ட 13 துறைகள் சார்ந்த 55 திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 

இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் வாசிக்க..

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் புதிய மைல்கல்.. குவியும் பயணிகள், நீளும் சேவைகள்..

Apple Air-Pods: ஆப்பிள் ஏர்-பாட்ஸ் - உடல் சூட்டை கூட கண்டுபிடிக்குமாம்..! புதிய சாதனத்தில் இத்தனை வாவ்களா?!

Continues below advertisement