5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.


டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலு, பரனூர் உள்ளிட்ட நகராட்சி, மாநகராட்சி பகுதியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். 8 சாலைகளை நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் அவர் கூறினார்.


மேலும் படிக்க: Madurai: சித்தூரில் கி.பி.13 ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு !


மேலும், சென்னை - செங்கல்பட்டு 8 வழிச்சாலையை திண்டிவனம் வரை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், சாலை திட்டங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், ஏற்கெனவே இருந்த அரசுதான் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.


தமிழ்நாடு அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளுக்கு கொடுக்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்து அமைச்சர் எ.வே.வேலுவிடம் கட்கர் கேட்டார். இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, புதுக்கோட்டை எம்எல்ஏ அப்துல்லா, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.


மேலும் படிக்க: Annapoorani: அனாதையாக இருக்கும் அண்ணப்பூரணியின் அரசு சிலை..! காரணம் இதுதானாம்...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண