பணிநேரத்தில் காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சுற்றிக்கை வெளியிட்டுள்ளார். 


பணிநேரத்தில் காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சுற்றிக்கை வெளியிட்டுள்ளார். 


முன்னதாக, திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் ராதிகா, தனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், " மனுதாரர் பணியிடத்தில் உடன் பணி புரிவோரை வீடியோ பதிவு செய்யக் கூடாது என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து அதுபோல் செய்து வந்ததால் அவருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


அரசு தரப்பில் மனுதாரர்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோரிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரிக்க விரும்பவில்லை. அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதும்,  அதன்மூலம் வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.



ஏதேனும் அவசரம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு,  "அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, வீடியோ எடுப்பது மற்றும் அலுவலக நேரத்தில் பிரச்சினை நடைபெறும் நேரத்தில் வீடியோ எடுப்பது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும். அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விலக்கு குறித்தும் விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.


அலுவலக பயன்பாட்டுக்கெனில் அதற்கென தனி செல்போன் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறை செயலர், இந்த உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்கு உள்ளாக, உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண