தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆவின் நிறுவனம். மிகப்பெரிய பால் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
“ ஆவின் சார்பில் ஒரு லிட்டர் பால் மற்றும் அரைலிட்டர் பாட்டில்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆவினுக்கு சொந்தமான 28 பால் நிலையங்களிலும் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும்.
ஆவின் பால் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பான்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்பனை செய்யப்படும். ஆவின் பால் பாக்கெட்டுகள் மேல் திரைப்பட விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் மூலமாக விவசாயிகளிடம் தினசரி பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின்பால் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், பல்வேறு கடைகளிலும் ஆவின் பால் பயன்படுத்தப்பட்ட வருகிறது.
ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால் பொருட்களான தயிர், வெண்ணெய், இனிப்புகள் உள்ளிட்ட பலவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், குடிநீர் விற்பனையிலும் களமிறங்கினால் அதன்மூலம் அதிகளவில் வருவாய் ஈட்ட முடியும் என்று தமிழக அரசு நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுமட்டுமின்றி, செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக தமிழக அரசு சார்பில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட்டின் இலச்சினையான சின்னதம்பி முத்திரையை பதித்து விற்பனை செய்தனர். தமிழக அரசின் அந்த முயற்சிக்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது. அதேபோல, வாரந்தோறும் புத்தம் புதிய திரைப்படங்கள் வெளியாவதால் அந்த திரைப்பட போஸ்டர்களையும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வெளியிட்டால் அதன்மூலமும் அதிக வருவாய் ஈட்டலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது. அமைச்சர் நாசரின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Group 4 Answer Key: குரூப் 4 தேர்வு Answer Key மீது ஆட்சேபனை தெரிவிக்கலாம்; ஆனால்.. இது முக்கியம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
மேலும் படிக்க : Anbuchezhiyan IT raid : அன்புச்செழியன் ஆபீசில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்