முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் பேசியதாவது:“நான் கேள்விப்பட்ட  அருமையான விஷயம் இது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சரா இருந்த போது, கலைஞர் எதிர்க்கட்சித் தலைவரா இருந்தாரு. எம்.ஜி.ஆர் அவரின் பி.ஏ வை அனுப்பி அவரு ஃப்ரீயா இருந்தா அவரை பார்க்க வரேனு சொல்லு என சொல்லி இருக்கிறார். அதற்கு கலைஞர் யோவ் அவரு தான்யா முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் நான் தான் அவரை போய் பார்க்கணும் என்று சொல்லி இருக்காரு. 


எம்.ஜி.ஆர் - கருணாநிதி:


என்ன பிரச்சனைனா நான் கேள்விப்பட்டது. பெருந்தலைவர் காமராஜரோட மிகப்பெரிய படத்தை சட்ட சபையில தொறக்குறாங்க. அதற்கு கீழே பெருந்தலைவர் காமராஜரை பத்தி அழகான வாசகம் ஒன்னு எழுதுறாங்க. அதுக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சொல்றாங்க இதுக்கு ஒரு நல்ல வாசகம் எழுதனும்னா அது கலைஞரால தான் முடியும் அப்டினு. அதைவிட ஒரு சிறப்பா ஒரு வாசகத்தை வேற யாராலையும் எழுத முடியாது. அதனால ஃப்ரீயா இருந்தா நான் அவரை பார்க்க வரேணு சொல்லு. நீ பார்க்க வர்ரதா நான் பார்க்க வர்ரதா அப்டிணு ரெண்டு பேருக்குள்ள சண்டை.  அவ்வளவு மிகச்சிறந்த நண்பர்கள் இரண்டு பேரும். 


பங்காளி சண்டை - பகையாளி சண்டை அல்ல:


எம்.ஜி.ஆர் அவர்களும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் பெரியார் வழி வந்தவங்க தான். எங்களுக்குள்ள இருக்குறதெல்லாம் பங்காளி சண்டை தான் பகையாளி சண்டை இல்லை. பெரியார் படத்துல நடிக்குறதுக்காக கலைஞர் கிட்ட வாழ்த்து வாங்க போன அப்போ. நீ தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் தானே அடுத்த டைம் மேடையில நான் எம்.ஜி.ஆருக்காக எழுதின வசனம் ஒன்னு பேசிக்காட்டு என்றார்.


பெருந்தலைவர் காமராஜர் கால ஆட்சியே திராவிட மாடல் ஆட்சி தான். ஏன்னா எல்லோரும் படிக்கணும்னு ஆசைப்பட்டாரு இல்ல பெருந்தலைவர். எல்லோரும் படிக்க வேண்டும் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் அப்டினு நெனச்ச தொடர்ச்சி பாருங்க.


திராவிட மாடல் ஆட்சினா என்ன? சமூக நீதினா என்ன அப்டின்றத அவ்வளவு அழகா எடுத்து சொல்றாங்க. காமராஜர் ஆரம்பித்த மதிய உணவுத் திட்டம் எம்.ஜி.ஆர் காலத்தில் சத்துணவு திட்டமா மாறி , அதுல முட்டையை கொண்டு வந்து வைக்கிறாரு டாக்டர் கலைஞர் அவர்கள். அதை சிற்றுண்டியா மாத்துறாரு நம்ம ஸ்டாலின் அவர்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு அரணாகா நாம் எல்லோரும் இருக்க வேண்டும்” இவ்வாறு சத்யராஜ் பேசினார். 


மேலும் படிக்க 


Gold, Silver Price: அடேங்கப்பா..! தங்கம் விலை சென்னையில் புதிய உச்சம் - ஒரு கிராம் ரூ.6,015-க்கு விற்பனை