”பொங்கல் கேட்ட கணவர் இட்லி வாங்கிக் கொடுத்த மனைவி - கோபத்தில் மாத்திரையை அதிகமாக உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கணவர்.”

 

உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவர்

 

மதுரை மாநகர் தத்தனேரி அருள்தாஸ்புரம் பெரியசாமிநகர் 4- ஆவது தெரு பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் (64) - பாண்டிசெல்வி (58) தம்பதியினர் அதே பகுதியில் வசித்துவந்துள்ளனர். மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனியாக வசித்துவந்துள்ளனர்.  பாண்டிச் செல்வி பூ வியாபாரம் பார்த்துவந்த நிலையில் சண்முக சுந்தரம் கடை ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முதியவர் சண்முக சுந்தரத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிலயே இருந்து ஓய்வு எடுத்துவந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தினசரி மாத்திரை எடுத்துவந்துள்ளார்.

 


 

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி பூ வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மூதாட்டி பாண்டிச் செல்வியிடம் வீட்டில் ஓய்வில் இருந்த சண்முக சுந்தரத்திடம் தான் வாங்கிவந்த இட்லியை கொடுத்து சாப்பிட கூறியிருக்கிறார்.  அப்போது நான் பொங்கல் தானே கேட்டேன் ஏன் இட்லி வாங்கிவந்தாய் என தனது மனைவியிடம் சத்தமிட்டு பேசியுள்ளார்.  இதனையடுத்து நாளைக்கு பொங்கல் வாங்கி வருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முக சுந்தரம் நான் சொல்வதை கேட்கமாட்டியா ? என்ற கோபத்தில் தினமும் சாப்பிடும் மாத்திரையை மொத்தமாக சாப்பிட்டுவிட்டு மாத்திரை டப்பாவை கீழே போட்டுவிட்டு மாத்திரை முழுவதையும் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து சண்முக சுந்தரத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக செல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் குலவழக்கப்படி சண்முகசுந்தரத்தின் உடலுக்கு இறுதிசடங்கு நடைபெற்றது.

 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)