பொன்முடி ஆபாசமாக பேசியது உண்மை; ஆதாரம் இருக்கு - அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதற்கு ஆதாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதற்கு ஆதாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பொன்முடியை போன்று யாரும் பேசிவிடக்கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு பேசியிருந்தார். பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இதுகுறித்து வீடியோ வெளியான நிலையில் பொன்முடி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. 

இதுகுறித்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடி மீது ஐந்து இடங்களில் புகார் வந்துள்ளன என தகவல் தெரிவித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து மறு விசாரணையில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. அதாவது, “பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யுங்கள். பல வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்து போய்விடும். எதிர்காலத்தில் பொன்முடி போன்று யாரும் பேசக்கூடாது. 

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola