இந்தியாவில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் நரபலி கொடுக்கும் சம்பவம் அங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் இரண்டு பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்று  நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் கேரள மட்டுமின்றி உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் உட்பட அனைவரையும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நரபலி கொடுத்து வருகின்றனர். 


பாதுகாப்பு கோரி மனு


இந்நிலையில், வளர்ப்புத் தாயால் நரபலி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, "எனது தாய் சுதா ஷர்மா மூட நம்பிக்கைகளிலும், மாந்த்ரீகங்களிலும் அதிக அளவில் நம்பிக்கை கொண்டவர்.  தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே 10 வயது சகோதரர் உட்பட 2 பேரை அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா  தாக்கல் செய்த மனுவில், தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.


தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், தனது தாய் சார்ந்துள்ள அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.


"தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம்”


வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு  கொண்டு சென்று விட்டால் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என மனுவில் கூறியுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் படிக்க


சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமா? அதிகாரிகள் விளக்கம் என்ன?


Rahul Gandhi: “திருமணம் நடக்காதது ஏன் என தெரியவில்லை; ஆனால் இந்த ஆசை இருக்கு” - மனம் திறந்த ராகுல் காந்தி!