காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் குழந்தைகள் பெற விருப்பமுள்ளதாக தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய பாட்டி இந்திரா காந்திக்கு மிகவும் பிடித்தவர் என்றும், அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா அவர்களின் இத்தாலிய பாட்டி பாவ்லா மைனோவுக்கும் பிடித்தமானவர் என்றும் கூறியுள்ளார்.
இத்தாலிய நாளிதழக்கு அளித்த பேட்டியில், 52 வயதான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது திருமணம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வியை எதிர்கொண்டார், இருப்பினும் அவர் "குழந்தைகளைப் பெற விருப்பமுள்ளதாக கூறியுள்ளார். இது வரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு ராகுல் காந்தி, “விசித்திரமாக இருக்கிறது. எனக்கும் தெரியவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது. இருப்பினும் நான் குழந்தைகளைப் பெற விரும்புகிறேன்”, எனக் குறிப்பிட்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிலோமீட்டர் பாரத் ஜோடோ யாத்திரையின் அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பாத யாத்திரையின் போது தாடி வளர்த்துள்ளது குறித்த கேள்விக்கு, “முழு அணிவகுப்புக்கும் அதை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். இனி அதை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்" என தெரிவித்தார். ராகுல் காந்தி தனது இந்திய பாட்டி இந்திரா காந்திக்கு மிகவும் பிடித்தவர் என்றும், அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா அவர்களின் இத்தாலிய பாட்டி பாவ்லா மைனோவுக்கும் பிடித்தமானவர் என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் 98 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், அவருடன் மிகவும் இணக்கமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். Paola Maino கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் காலமானார்.
பிப்ரவரி 1 அன்று வெளியிடப்பட்ட செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், ஜனநாயகக் கட்டமைப்புகள் சரிந்து வருவதால், பாராளுமன்றம் சரியாக செயல்படாததால் பாசிசம் நாட்டில் நுழைந்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் பாசிசத்திற்கு மாற்றுக் கருத்தை முன்வைத்தால், பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசுகையில், “எங்கள் கொள்கை, நம் சொந்த உயிரை விட மதிப்புமிக்கது; இதற்காக, என் பாட்டி மற்றும் தந்தை இறந்தது போல், தேவைப்பட்டால், நான் இறக்க தயாராக இருக்கிறேன். இத்தாலியில் பிறந்த ஒரு பெண்ணான என் அம்மா தனது முழு வாழ்க்கையையும் அதற்காக அர்ப்பணித்துள்ளார். நான் இதனை இறுதிவரை பாதுகாப்பேன், ”என்று அவர் கூறினார்.
மேலும், “பாசிசம் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வருகிறது. பாராளுமன்றம் சரியாக செயல்படுவதில்லை. இரண்டு வருடங்களாக பாராளுமன்றத்தில் பேச முயற்சித்தாலும் பேச விடுவதில்லை. அதிகார சமநிலை முடக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திரம் என்பது ஒன்று கிடையாது. ஆர்.எஸ்.எஸ் பிரிவைச் சேர்ந்த இந்து அமைப்பினர் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊடுருவி அதை கட்டுப்படுத்தி வருகின்றனர்”என்று அவர் குறிப்பிட்டார்.