ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க பரிந்துரைப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படுமென முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சிறைகளில் ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் ஏராளமான கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். இந்த சூழலில் பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை அவர்களின் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசால் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது.


ஆனால் அதில் நோய்வாய்ப்பட்ட பல கைதிகள் சேரவில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதை பரிந்துரைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என். ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்படுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்படும்


தமிழ்நாடு சிறைகளில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என தண்டனை முடிந்தும் பயன்பெற முடியாதவர்கள் தொடர்பான வழிமுறைகளை இந்தக் குழு வழங்கும். சட்டம், விதிகளின் அடிப்படையில் முன் விடுதலைக்கு உரிய பரிந்துரையை இந்தக் குழு அளிக்கும். 


மனிதாபிமான, நல்லெண்ண அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரையை இந்தக் குழு வழங்கும். மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 607 பேருக்கு கொரோனா தொற்று;8 பேர் உயிரிழப்பு


Swega Saminathan | 17 வயதில் ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை: விவசாயி மகளுக்கு சாத்தியமானது எப்படி?


Yearender 2021: 2021-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..


Maridhas Case Dismissed | யூ ட்யூபர் மாரிதாஸ் மீதான இரண்டாவது வழக்கும் ரத்து.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


டோல்கேட்டுகளில் வசூல் ஆகும் தொகை குறித்து டிஜிட்டல் போர்டு வேண்டும் - லாரி உரிமையாளர்கள் சங்கம்