லாரிகள் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் தலைமையில் இன்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்  தமிழகம் முழுவதும் உள்ள எம்சாண்ட் உற்பத்தி செய்யும் ஆலைகள் எம்சாண்ட் உற்பத்திக்கு தேவையான கருங்கல் சக்கையை குவாரிகளில் இருந்து வாங்கி எம்சாண்ட் தயாரிப்பது என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது . பெரும்பாலான கருங்கல் சக்கை வெட்டி எடுக்கும் குவாரிகள் மிககுறைந்த அளவில் சக்கை வெட்டி எடுப்பதாக அரசுக்கு கணக்கு காட்டி விட்டு அரசு அதிகாரிகள் துணையுடன் மிகப்பெரிய அளவில் திருட்டுத்தனமாக (பாஸ் இல்லாமல்) கனிமக் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 



மேலும் எம்சாண்ட் , ஜல்லி ஏற்றி வரும் லாரிகள் மீது கனிமவள கடத்தல் சட்டம் M.M.Act Sec 21 மற்றும்  (IPC 379) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவதை கண்டித்தும் - லாரிகளில் அதிகபாரம் ஏற்ற வலியுறுத்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது த.நா.மோ.வா.பா.சட்டம் பிரிவு 113 , 114 & 199 ன் படி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும், இதை தடுக்க வேண்டிய கனிம வளத்துறை அதிகாரிகள் மேற்படி குவரி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறையாக ஆய்வு செய்வதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 



 

இதனையடுத்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யுவராஜ் செய்தியாளர்கள் சந்திக்கையில், அதிக பாரம் ஏற்றி அனுப்பும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பேசுகையில் தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்.



 

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்கச்சாவடியில் அமைத்தால் அதற்கு எந்த எதிர்ப்பும் கிடையாது ஆனால் அதற்கு எவ்வளவு செலவாகிறது, இனி எத்தனை வருடங்களுக்கு அதில் பணம் வசூல் செய்யப்படும். எவ்வளவு தினமும் வசூல் ஆகிறது என்பதை தெரிவிக்கும் வண்ணம் டிஜிட்டல் திரையில் அனைவருக்கும் பொதுவாக காட்ட வேண்டும். அதில் முழுமையான தொகை வசூல் ஆனபிறகு பேலன்ஸ் எதுவும் இல்லை என்று காட்டும் போது சுங்கச்சாவடி முழுமையாக மூடப்பட வேண்டும். இவ்வாறு செய்து தமிழக அரசு இதில் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என தெரிவித்தார்.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண