பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார்.  2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். மேலும், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். சிவாஜி: தி பாஸ்,  செல்லமே, பாய்ஸ், விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.   


1994ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ படத்தில் கே.வி ஆனந்த் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை யும் அவர் பெற்றார்.


கே.வி ஆனந்தின் திடிர் மறைவுக்கு, தென்னிந்திய திரைத்துறையினர் தங்ககளது  இரங்கலைகளை தெரிவித்து வருகின்றனர்.  



காப்பான் படக்குழுவினருடன் கே.வி ஆனத்த்  


 


இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கே.வி ஆனந்தின் உடல்  அவரது குடும்பத்தினரிடம் இன்று காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


கே. வி ஆனந்த்:  அக்டோபர் 30, 1966 அன்று குமார் வெங்கடேசன் மற்றும் அனசூயா வெங்கடேசனுக்கு மகனாகப் பிறந்தார். அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டமும், சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸில் முதுகலை பட்டமும் பெற்றார்.



 


திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக, கல்கி, இந்தியா டுடே, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற முக்கியப் பத்திரிக்கை நிறுவனங்களில் ஃப்ரீலான்ஸ் புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றினார்.