- CM Stalin Speech: போதைப் பழக்கம் கொடிய நோய்.. தனிமனிதருக்கு மட்டுமல்ல.. மொத்த மாநில வளர்ச்சிக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை செயல்படுத்தி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. மேலும் படிக்க
- Minister E. V. Velu: ’திமுக அரசு கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை’.. அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்!
கோவை மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதி வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் படிக்க
- TN Arts College Admission: அரசு கலை, அறிவியல் முதுநிலைப் படிப்புகள்; ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பில் (Post Graduate Courses) சேர ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 22 வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை 2023-24ஆம் ஆண்டில் நிரப்புவதற்கான அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
- TN Rain Alert: 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்? இன்றைய வானிலை நிலவரம்..
11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- Land Registration: ரைட்டு.. காலி மனையை பதிவு செய்கிறீர்களா?: பறந்தது புதிய உத்தரவு.. பத்திரப்பதிவுத்துறை அதிரடி
காலி மனை இடங்களை பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பாக, பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார்பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு பதிவிற்கு வரும்போது அவ்விடங்களில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் கட்டடம் குறித்த தகவல்களை ஆவணங்களில் குறிப்பிடாமல் அதனை காலிமனையிடமாகவே பதியும் நிலை தொடர்வதாக புகார்கள் வருகின்றன. மேலும் படிக்க