சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு பங்களாவில் தொடர்புடையவர் என்கிற அடிப்படையில் சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.