புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு


பிப்ரவரி 22:




புதுச்சேரியில் இதுவரை ஆறு முறை ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது. அதேபோல மூன்று முறை முதல்வர் மாற்றம் நடந்துள்ளது. புதுச்சேரி அரசியல் சற்றே விநோதமானது. கட்சிகள் எல்லாவற்றையும் தாண்டி, தனிநபர் அடையாளமும் இங்கு மிக முக்கியம். யூனியன் பிரதேசமாக இருப்பதால் புதுச்சேரி இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பல விஷயங்களில் இடைவெளி உள்ளது.


குறிப்பாக புதுச்சேரியில் அக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, கட்சி மாற்றம் என்பது சர்வசாதாரணமாக இருந்தது. இதுவரை ஆதரவு தந்த கட்சிகள், எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன. இம்முறை சொந்தக் கட்சியில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்வதது இதுவே முதல்முறை.


புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்


பிப்ரவரி 25:  


புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிப்ரவரி 25ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.


புதுச்சேரியில்தேர்தல் முடிந்தும் நீடித்தகுடியரசு தலைவர்ஆட்சி




 


ஏப்ரல் 6: புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி வென்றது.


மே 7: புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7-ல் பதவியேற்றார். குறிப்பாக முதல்வர் பதவியேற்று 45 நாட்கள் மேலாகியும் அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் நிலவியது. இதனால் குடியரசு தலைவர் ஆட்சி நீடித்தது.


ஜுன் 27: முதல்வர் பதவியேற்று 45 நாட்கள் மேலாகியும் அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் நிலவியது. இதைதொடர்ர்ந்து ஜுன்27ம் தேதி ரங்கசாமி அமைச்சரவை பதவியேற்பு நடைபெற்றது.


40 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் பெண் அமைச்சர்


ஜுன் 27:



புதுச்சேரியில் கடந்த 1980-ம் ஆண்டு காங்கிரஸ், திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார். இதன் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, ரங்கசாமி அமைச்சரவையில் போக்குவரத்துதுறை அமைச்சராக உள்ளார், இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். இவர் 2ஆவது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பெண்களுக்கு மட்டும் தனி (பிங்க்கலர்) பேருந்து கட்டணமின்றி இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்க அறிவிப்பு வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


புதுச்சேரியில் மதுபானங்களுக்கு 20 சதவீதம் கொரோன சிறப்பு வரி


ஜுன் 15:



புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுபானங்களின் விலை, 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில குடிமகன்கள் புதுச்சேரிக்கு வருவதை தடுக்க, மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இது, கடந்தாண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், அனைத்து வகை மதுபானங்களுக்கும் கொரோனா வரியாக 25 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை உயர்ந்தது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த கொரோனா வரி, கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டது .


புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்


ஜூலை 26:



புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 2011 வரை பொறுப்பில் இருந்தனர். அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அக்டோபருக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்கும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி செப்டம்பர் 22-ம் தேதி முதலில் அறிவிக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு,கோரி வழக்கு தொடரபட்டதன் காரணமாக இடைக்கள தடைவிதிதுள்ளனர்.  


 


புதுச்சேரி அருகே வீட்டு வாசலில் 12 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 மாணவர்கள்.


ஜூலை 28:



புதுச்சேரி காட்டேரிக்குப்பம் அருகே சந்தை புதுக்குப்பம் பால் சோசைட்டி வீதியில் வசிக்கும் நாகராஜ் (23) என்பவர் வீட்டில் கஞ்சா செடியை தாயிடம் அழகு செடி என கூறி 12 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். விரைவில் பணக்காரன் ஆகா வேண்டும் என்பதர்க்காக வளர்த்ததாக தெரிவிதுள்ளர்.


செல்போன்களை ஒட்டுக்கேட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு


ஜூலை 28:



இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை நரேந்திர மோடி அரசானது மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி அனைவரின் செல்போனை ஒட்டுக்கேட்டு பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப் நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தி வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.


புதுச்சேரியில் சூனியக்காரர் என நினைத்து இளைஞர் எரித்துக் கொலை செய்த பாஜக பிரமுகர்


ஜூலை 28:



திருச்சி பிரட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). இவர் கட்டடங்களுக்கு செண்டரிங் அடிக்கும் பணி செய்த வருகிறார். உறங்க இடம் தேடி மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையம் உள்ளே சென்று தூங்க முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அவரை அங்கிருந்து கிளம்பும்மாறு கூறியதையடுத்து ஊழியர்களுக்கும் சதீஷ்குமார்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜாமவுரியா சூனியக்காரர் என நினைத்து எரித்துக் கொன்றார்.


புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு


ஆகஸ்ட் 19:



புதுச்சேரி, லாஸ்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் தனது கணவருடனும், இரண்டு குழந்தைகளுடனும் வசித்துவருகிறார் அந்த இளம் பெண். கணவர், தாழ்வு மனப்பான்மை காரணமாகத் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கணவன் அடிப்பதால் வலியைத் தாங்க முடியாத அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும் படியும் கூறியுள்ளார். ஆனால் ஏட்டுசண்முகம் புகரை விசாரிக்காமல், அந்த பெண்ணின் கையை இழுத்து, உனக்கு ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா? என்று கேட்டுள்ளார்.   


பிரபல ரவுடி பாம் ரவி கொலை


அக்டோபர்  24:



புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி என்கிற பாம் ரவி (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலைகள், 7 வெடிகுண்டு வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவி  ஜாமீனில் வெளியே வந்து இருந்தார்.  இந்த நிலையில் அந்தோணி (28) என்பவருடன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ரவி வெளியே புறப்பட்டார்.  அப்போது பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வழிமறித்து வெடிகுண்டு வீசி இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.


30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை படைத்த த்ரிஷா:


டிசம்பர் 13:



புதுச்சேரியில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த த்ரிஷா என்ற இளம்பெண் 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார். புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் ஷக்திரிய குருகுலம் கடந்த 10 வருடமாக மாணவர்களுக்கு போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் சிலம்பம், போர் சிலம்பம், குஸ்தி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, மல்யுத்தம், வர்மக்கலை, தரைப்பாடம், உடற்கட்டு பாடம், ஆகிய பாரம்பரிய கலைகளை  பயிற்றுவித்து வருகின்றது. 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை: த்ரிஷா வெற்றி மேலும் வருடம் தோறும் பாரம்பரிய கலைகளை பாதுகாத்திடும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று பூரனாங் குப்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் மும்பையைச் சேர்ந்த த்ரிஷா என்ற பெண் 2.600 கிலோ எடை கொண்ட கரலா கட்டையை இடுப்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1082 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்.


விசில் அடிச்சா பறந்துவந்து பழத்தை சாப்பிடும் வவ்வால்கள்: 


டிசம்பர் 02:



புதுச்சேரி கன்னியக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை கிருஷ்ணன். இவர் விசில் அடித்து அழைத்தவுடன் வவ்வால்கள் ஒவ்வொன்றாக வந்து அமர்ந்துகொண்டு அவரது கையில் இருந்த பழத்தை நிதானமாக சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளன. இதை அவர் தினமும் கடைபிடித்த நிலையில், வவ்வால்களும் வந்து சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.