இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் கச்சத்தீவு தொடர்பாக தெரிவித்த கருத்து மீண்டும் பேசு பொருளானது. 


கச்சத்தீவு விவகாரம்:


இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய அரசின் முன்னாள் துணை தூதர் நடராஜன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். தேர்தல் சமயத்தில் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டுமென சொல்வது வாக்கு வாங்குவதற்காகவும் இருக்கலாம் என மக்கள் கருதுவார்கள்.


கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. என்னை பொறுத்தவரை கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியம் கிடையாது. இலங்கை எல்லைக்குள், இந்திய மீனவர்களும், இந்திய எல்லைக்குள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்தது போல, எல்லை பார்க்காமல் மீன் பிடிக்க அனுமதித்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு வரும்.




மத்திய அரசின் முடிவு:


கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசு எதுவும் செய்திருக்க முடியாது. மாநில அரசு போராட்டம் செய்து மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்க மட்டும் தான் முடியும். மற்றபடி முடிவு மத்திய அரசு தான் எடுக்க முடியும். 1974 ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசிடம் சொல்லியிருக்கத்தான் முடியும். வேறு எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு.


தீர்வு காண வழிவகுக்கும்:




இது நல்ல முடிவாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. கச்சத்தீவை திரும்ப பெற வாய்ப்புகள் இல்லை. வலுக்கட்டாயமாக அதனை எடுக்கவும் முடியாது. அதற்காக சாத்தியமும் கிடையாது இந்திய கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தல், எல்லை தாண்டி இரண்டு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிரந்தர தீர்வு காண வழிவகுக்கும் என இந்திய அரசின் முன்னாள் துணை தூதர் நடராஜன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.


Also Read: PM Modi: கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது எப்படி? - காங்கிரசை ஒருபோதும் நம்பக்கூடாது : பிரதமர் மோடி


Also Read: Udhayanidhi Stalin: இலங்கை தாக்குதலை ஏன் தடுக்கவில்லை? எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கல் எப்போது? பிரதமருக்கு உதயநிதியின் 10 கேள்விகள்