PM Modi: காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக நாட்டை பலவீனப்படுத்துவதாக, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.


பிரதமர் மோடி டிவீட்:


இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியின் போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இதுதொடர்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆர்டிஐ மூலம் பல்வேறு தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளார். இந்த தகவல்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ கண்களை திறந்து வைப்பதோடு திகைக்க வைக்கிறது! கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அநாகரிகமாக கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன . இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்துகிறது மற்றும் காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்பதை  மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவே,  காங்கிரஸின் 75 ஆண்டுகளாக உழைத்து எண்ணிக்கொண்டிருக்கிறது” என சாடியுள்ளார்.






கச்சத்தீவு - ஆர்டிஐ தகவல்கள் என்ன?


அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்டிஐ பதிலில்,



  • மீன்வளம் மற்றும் பிற வளங்கள் உட்பட கச்சத்தீவின் மீதான உரிமைகள் 1875 முதல் 1948 வரை ராமநாதபுரம் ராஜாவால் 'தொடர்ந்து தடையின்றி' அனுபவிக்கப்பட்டன.

  • எரிமலை வெடிப்பால் உருவான கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அதிகப்படியான உரிமை உள்ளது என, 1960ம் ஆண்டு அட்டார்னி ஜெனரல் எம்.சி. செடல்வாட் தெரிவித்தார்

  • அட்டார்னி ஜெனரலின் கருத்தையும் மீறி, கச்சத்தீவால் எழும் பிரச்னைகளை தடுக்க அதன் மீதான உரிமைகோரலை விட்டுக்கொடுக்க தயங்கமாட்டோம் என, 1961ம் ஆண்டு பிரதமர் நேரு தெரிவித்தார்

  • 1968ம் ஆண்டில் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, நல்ல இருதரப்பு உறவுகளின் தேவையுடன் இந்தியாவின் கோரிக்கையை சமநிலைப்படுத்த வேண்டும் என்று கூறியது.

  • 1974ம் ஆண்டு தீவின் மீதான உரிமைகோரலை கைவிட முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது

  • கச்சத்தீவை உரிமைகோர இலங்கையிடம் ஆவணங்கள் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், ராமநாதபுரம் ராஜாவிடம் உரிய ஆவணங்கள் இருப்பதை தமிழக அரசால் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால்ம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது” போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.