கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு 84 ஆயிரத்து, 315 கான அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 65 ஆயிரம் கன ஆழியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், பாசன கிளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 


Also Read | Krishna Jayanthi 2022: கோகுலத்து கண்ணனை வரவேற்கும் கிருஷ்ண ஜெயந்தி! வரலாறு என்ன?




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி அளவில் வினாடிக்கு, 1,253 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 800 கன அடியாக இருந்தது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 865 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 88.06 அடியாக இருந்தது. 


Also Read | Krishna Jayanthi Pooja: கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை... எப்படி கொண்டாடுவது?




திண்டுக்கல் மாவட்டம், வடக்காடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.66 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 




 


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம்  அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 227 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.28 அடி இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Also Read | Krishna Jayanthi 2022 Wishes: கிருஷ்ண ஜெயந்தி: வாழ்த்துகள்; புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே!