பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) என்றாலே கிருஷணர், ராதையாக அலங்கரிக்கப்பட்ட குழந்தைகளும், வீடுகளில் பதியப்பட்ட கிருஷ்ணர் பாதங்களும் தான் நம் நினைவுக்கு வரும்.
ஆகஸ்ட் 19 கிருஷ்ண ஜெய்ந்தி
கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி (ஆவணி 3) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எப்படி கிருஷ்ணரை(Krishna Jayanthi Pooja) வழிபடுவது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நம் ஊரில் மாலை வேளைகளில் இங்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
வழிபடும் முறை
- நடு இரவில் பிறந்ததாகக் கருதப்படும் கிருஷ்ணரின் பாதங்கள் வீட்டுக்குள் பூஜையறை வரை அரிசி மாவால் பதியப்பட்டு அவரை வரவேற்கும் விதமாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
- கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து நெய் தீபம் ஏற்றலாம்.
- தேங்காய், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருள்களுடன், கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணெய், அவல் ஆகியவற்றையும், சீடை, முருக்கு, லட்டு, தேன் குழல் போன்ற உணவுப் பொருள்களையும் அவருக்குப் படைக்கலாம்.
- இவற்றை முடிந்த அளவுக்கு மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் ஆலிழை கண்ணன் அடியெடுத்து வைத்து வீடுகளுக்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.
- கிருஷ்ணர் துதிகள், மந்திரங்களை உச்சரித்து பூக்களைத் தூவி வழிபடுவது மிகவும் நல்லது.
- உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கண்ணன், ராதைபோல அலங்கரித்து அவர்களுக்கு இந்தப் பிரசாதங்களை வழங்குங்கள். இந்த வழிபாட்டு முறை குழந்தைகளின் கல்வி, உடல்நலனுக்கு நல்லது.
- குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற இந்த வழிபாடுகளை செய்யுங்கள்.
- இந்த நாளில் காலை சீக்கிரம் கண் விழித்து குளித்துவிட்டு விரதம் இருப்பது பல விசேஷ பலன்களைத் தரும் எனக் கூறப்படுகிறது.
- கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் ஏழை எளிய சிறுவர் சிறுமிகளுக்கு உணவு, உடை, கல்வி உதவிகளை செய்தால் நம் வாழ்வில் உள்ள எல்லா மனக்குறைகளையும் நீக்கி, மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும்.
வீடுகளுக்கு வந்து அருள்பாலிக்கும் கிருஷ்ணர்
கடவுள் கிருஷ்ணர் கண்ணன், முகுந்தன், பார்த்தசாரதி, கோவிந்தன், கோவர்தன், வேணு கோபாலன் என பல பெயர்களால் பக்தர்களால் மனமுருகி அழைக்கப்படுகிறார்.
கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி. பக்தர்களின் வீடுகளுக்கு கிருஷ்ணர் வந்து அருள்பாலிப்பதே இந்த நன்னாளின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் ராச லீலா என்றும் தஹி அண்டி (தயிர்க் கலசம்) என்றும் கோலகலமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த விழாவை அஷ்டமி ரோகிணி என அழைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்