Krishna Jayanthi 2022 Wishes in Tamil: கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி. பக்தர்களின் வீடுகளுக்கு கிருஷ்ணர் வந்து அருள்பாலிப்பதே இந்த நன்னாளின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் ராச லீலா என்றும் தஹி அண்டி (தயிர்க் கலசம்) என்றும் கோலகலமாக கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) கொண்டாடப்படுகிறது.


இப்போதெல்லாம் எல்லா பண்டிகைக்கான வாழ்த்துகளையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக, ஃபேஸ்புக்காக போஸ்டாக வைப்பதுதான் ட்ரெண்ட். கிருஷ்ண ஜெயந்தியில் நீங்கள் பகிர சில வாழ்த்துச் செய்திகள் இதோ..


கிருஷ்ணர் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கீத உபதேசம் தானே. அந்த வகையில் டாப் 10 வாழ்த்தில் முதலிடம் இந்த வாழ்த்துச் செய்திக்குத்தான்.


வாழ்த்து 1: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.


வாழ்த்து 2: எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.


வாழ்த்து 3: கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே.
 
வாழ்த்து 4: சுய அழிவு நரகத்திற்கு மூன்று வாயில்கள். அவை காமம், கோபம் மற்றும் பேராசை. இந்த மூன்றையும் கைவிடுங்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 


வாழ்த்து 5: உங்கள் கவலைகள் அனைத்தையும் இந்த நாளில் கிருஷ்ணரிடம் விட்டு விடுங்கள். அவர் உங்களை கவனித்துக்கொள்வார்.  


வாழ்த்து 6: கிருஷ்ணர் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடனும், அன்பு மற்றும் அமைதியுடன் இருக்க ஆசீர்வதிப்பார்.  


வாழ்த்து 7: இந்த புனித நாளில்தான் மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பகவான் கிருஷ்ணர் பிறந்தார். இன்று கடவுள்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவோம். .
 
வாழ்த்து 8: உங்கள் வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி, ஆதரவு மற்றும் செல்வம் ஆகியவை கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களால் நிரப்பப்படட்டும். .


வாழ்த்து 9: கிருஷ்ணர் கீதையில் கற்பித்த பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எப்போதும் தர்மத்தின் வழியைப் பின்பற்றுங்கள்.   


வாழ்த்து 10: கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரும்.


கிருஷ்ண ஜெயந்தி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் உங்களுக்காக


https://sharechat.com/video/qP6Z8Gxl?referrer=url


https://www.youtube.com/watch?v=bC2xHz1MuYg


https://www.youtube.com/watch?v=bC2xHz1MuYg


https://www.youtube.com/watch?v=oXW0sxOB7J0


https://www.youtube.com/watch?v=U4zCx514RrU


வழிபாட்டு நேரம், செய்ய வேண்டியவை


தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என கிருஷ்ண ஜெயந்தி அழைக்கப்படும் நிலையில், மாலை வேளைகளில் இங்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் நடு இரவில் பிறந்ததாகக் கருதப்படும் கிருஷ்ணரின் பாதங்க வீட்டுக்குள் பூஜையறை வரை அரிசி மாவால் பதிந்து அவரை வரவேற்கும் விதமாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


மேலும் கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணெய், அவல் ஆகியவற்றையும், சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைத்து வழிபடலாம். இவற்றை முடிந்த அளவுக்கு மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால்  ஆலிழை கண்ணன் அடியெடுத்து வைத்து வீடுகளுக்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.