கள்ளக்குறிச்சி விவகாரம்:


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 55 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர். தற்போது வரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று மருத்துவமனையில் உள்ளவர்களை நலம் விசாரித்து வருகின்றனர்.


டாஸ்மாக் தான் அதிகமா இருக்கு:


இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று ஜூன் 23 கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்பது போல சிலர் பேசுகின்றனர். அது தவறான கருத்து. மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் ஒழிந்துவிடாது. சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்திவிட்டால் பிரச்சினை முடிந்து விடுமா? அதை முறைப்படுத்தவே செய்ய வேண்டும்.


தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகளே அதிகம் இருக்கின்றன என்பது உண்மைதான். அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிக்காதீர்கள் என சொல்வதை விட குறைவாக குடியுங்கள், உங்கள் உயிர்தான் முக்கியம் என்று அறிவுரை சொல்லும் இடங்கள் டாஸ்மாக் பக்கத்தில் இருக்க வேண்டும் “ என்று கூறினார்.


மேலும் படிக்க: Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்


 


மேலும் படிக்க: அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்