நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆகும். அண்ணாமலையார் கோயிலுக்கு வெளிநாடு ,வெளிமாநிலம், வெளியூர் என அனைத்து பகுதிகளிலும் பௌர்ணமி நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றுவதற்கு வருகை புரிகின்றனர்.தற்போது அதிக அளவில் ஆந்திரா, தெலுங்கனா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.


இந்தநிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதி சீனிவாசாபுரத்தை சேர்ந்த நாராயணா வயது (45) இவருடைய மனைவி ருசிங்கம்மாள் வயது (42), சுஜாதா வயது (28), ஜோதி வயது (35), வரலட்சுமி வயது  (55),கோபால் வயது (35), இவருடைய மனைவி பிரவிளிகா வயது ( 34),நிர்மலா  வயது (40) , இவரது மகள் லலிதா வயது (19) , தவிட்டி நாயுடு வயது (38), இவரது மகன் ஜெகன்மோகன் வயது (17) என 11 நபர்கள் காரில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். காரை திருப்பதி சீனுவாசபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் சாயிக்நயக்ரசூல் வயது (25) என்பவர் ஓடிவந்தார். இவர்கள் அனைவரும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சுற்றி வந்தபிறகு, அதிகாலையில் 5 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். 


கார் புளியமரத்தில் மோதி 2 பேர் பாலி 


கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை கிராமம் அருகே கார் சென்றபோது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து மீது கார் லேசாக உரசியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் சாயிக்நயக்ரசூல் மற்றும் 11 நபர்களும் படுகாயம் அடைந்தனர்.


இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன் மோகன் , பிரவிளிகா ஆகிய இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சக வாகன ஓட்டிகள் மற்ற அனைவரும் மீட்டு 108 அம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழித்து சென்றனர். இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பக்தர்கள் கோரிக்கை 


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலை தற்போதுவரையில் புதியதாக அமைக்கவில்லை,வேலூர் செல்லும் வழியில் சாலையின் நடுவில் குழிகள் உள்ளது. பல்வேறு இடங்கள் வேகத்தடைகள் இல்லை, வளைவுகள் அதிகம் உள்ளபகுதில் பதாகைகளை வைக்கப்படவில்லை, தற்போது வேலூர் பகுதில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் போக்குவரத்து உள்ளது, இதற்க்கு ஏற்றவாறு சிலைவிரிவாக்கம் செய்யப்படவில்லை, இதனால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் பௌர்ணமி நாட்களில் அதிக வாகனம் திருவண்ணாமலைக்கு வருவதால் ஒவ்வொரு மாதமும் விபத்துகள் ஏற்படுகின்றது.


இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு சொந்த மாவட்டத்திலே இவ்வாறு விபத்துகள் நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் உடனடியாக நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.