Jallikattu 2024 LIVE: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்
Jallikattu 2024 LIVE Updates: மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் காணலாம்.
முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும். எனக்கு அப்பா இல்லை. அம்மாவுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வருகின்றேன் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடத்தை பிடித்த கார்த்தி தெரிவித்துள்ளார்.
நான் தான் முதலிடம் பிடித்தேன். போட்டியை மாலை 6.30 வரை நீடித்தது தவறு. எனக்கு கார் பரிசு தேவையில்லை. முதலிடம் என அறிவித்தாலே போதும். அமைச்சர் மீது புகாரளிப்பேன் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 17 மாடுகளை பிடித்து இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருச்சி, மேலூர் குணா மாடு
மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் மாடு
முதல் பரிசு கார் - கருப்பாயூரணி கார்த்தி - 18 காளைகள்
2 ஆம் பரிசு பைக் - பூவந்தி அபிசித்தர் - 17 காளைகள்
2023 ஆம் ஆண்டு பூவந்தி அபிசித்தர் அலங்காநல்லூரில் முதல் பரிசும்
2022 ஆம் ஆண்டு கருப்பாயூரணி கார்த்தி அலங்காநல்லூரில் முதல் பரிசும் பெற்றுது குறிப்பிடதக்கது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 78 பேர் காயம் அடைந்துள்ளனர். வீரர்கள் 28, காளை உரிமையாளர்கள் 16, பார்வையாளர்கள் 27, காவலர்கள் 6, பணியாளர் ஒன்று என 78 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் அபி சித்தரும், 12 காளைகளை அடக்கி திவாகர் என்பவர் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டியில் 9வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 8 வது சுற்று முடிந்து 9வது சுற்று தொடங்கியுள்ளது. 8வது சுற்று முன்னிலையில் சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர் 11 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 661 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 17 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 47 பேர் காயமடைந்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 573 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 52 பேர் காயம் அடைந்துள்ளனர். வீரர்கள் - 24, காளை உரிமையாளர்கள் - 9, பார்வையாளர்கள் - 15, காவலர்கள் - 3, பணியாளர் - 1 என 52 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பெயரில் அவிழ்க்கப்பட்ட 2 காளைகள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் மும்முரமாக களத்தில் ஆடி வருகின்றனர்.
அலங்காந்லூர் ஜல்லிக்கட்டில் 6வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாடு பிடிபட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 28 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 18 மாடுகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 4வது சுற்று முடிவில் 302 மாடுகள் களமிறக்கப்பட்டு, அதில் 102 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை நடைபெற்ற 3 சுற்று முடிவுகளில் 205 மாடுகள் களமிறக்கப்பட்டுள்ளது. அதில் 65 மாடுகள் பிடிபட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சூரி, தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் வந்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காயமடைந்தவர்கள் விபரம்:
- மாடுபிடி வீரர்கள் : 11
- மாட்டின் உரிமையாளர்கள் : 3
- பார்வையாளர்கள் : 1
- காவல்துறை : 2
- ஆம்புலன்ஸ் ஊழியர் : 1
- மேல்சிகிச்சை : 2
நிலவரம் மொத்தம் : 18பேர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 10 பேர் காயமடைந்துள்ளனர். அதில், காளைகளை அடக்க முயன்ற 5 பேர் மட்டுமின்றி, பார்வையாளர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 110 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்காக நடிகர் அருண் விஜய் வந்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த சரவணக்குமார் முதலிடத்தில் உள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானின் 5 காளைகள் களமிறங்க வரிசையில் காத்திருக்கின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரர் ஒருவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 7 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டியில் இதுவரை 7 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், முதல் சுற்றில் மஞ்சள் நிற ஆடையில் மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்கள் ஆர்ப்பரிப்புடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரவாரமாக தொடங்கியது.
அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை முதல் காளையாக அவிழ்த்துவிடப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைக்கிறார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 மாடு பிடித்து முதல் இடம் பிடித்தார் பிரபாகரன்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இறுதிச்சுற்றான 10வது சுற்று தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு - 8வது சுற்று முடிவு அப்டேட்:
*மாடுபிடி வீரர்கள்:400
*மொத்த மாடுகள் -714
பிடிபட்ட மாடுகள் - 118
8ஆவது சுற்று முடிவில் முன்னிலை நிலவரம்:
பிரபாகரன், பொதும்பு (ஊதா 85) - 8 காளைகள்
தமிழரசன், சின்னப்பட்டி (மஞ்சள் 18) - 6காளைகள்
பாண்டீஸ்வரன், கொந்தகை (ரோஸ்- 113) - 6 காளைகள்
அஜித், பொந்துகம்பட்டி (ரோஸ் 128) - 5 காளைகள்
துளசிராம், மஞ்சம்பட்டி (ஆரஞ்ச் 363) - 5 காளைகள்
பாலமேடு ஜல்லிக்கட்டில் 8வது சுற்று நிறைவடைந்தது. இதுவரை 530 காளைகள் அவிழ்ந்து விடப்பட்டுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 7 வது சுற்றுகள் நிறைவடைந்து 8வது சுற்று தொடங்கியது. 7வது சுற்றுகளின் முடிவில் 620 காளைகள் களமிறங்கின.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 6வது சுற்று நிறைவடைந்து தற்போது 7வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும், நடிகர் சூரியும் வருகை புரிந்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 24 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 6வது சுற்றில் 50 காளைகள் களமிறங்கியுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் சீறிப்பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் முழு முயற்சியில் போராடி வருகின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் சீறிப்பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் முழு முயற்சியில் போராடி வருகின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை காளைகள் தாக்கியதில் 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 4 காளை மாடுகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை பொதும்பையைச் சேர்ந்த பிரபாகரன் 8 காளைகளை அடக்கி முதலிடம் உள்ளார்.
பாலமேட்டில் 3 சுற்றுகள் முடிந்த நிலையில் 289 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
பாலமேடி ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3வது சிற்று நிறைவடைந்துள்ளது. 4வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 9 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டாவது சுற்று முடிவடைந்து 3வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 6 காளைகளை அடக்கிய சின்னப்பட்டி தமிழரசு முதலிடத்தில் உள்ளார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 160 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 பார்வையாளர் உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 2வது சுற்றில் 3 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று முடிவடைந்து இரண்டாம் சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 106 காளைகள் மற்றும் 50 வீரர்கள் பங்கேற்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கக்காசு, பாத்திரங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்காக மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும், 700 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்கியது. வீரர்கள் உறுதிமொழியுடன் போட்டியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 152 பேருக்கு காயம் அடைந்தனர் என மதுரை மாவட்ட நிர்வாகம் தகவல்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 17 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார்.
காலை 8 மணிக்கு தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 10 சுற்றுகளுடன் நிறைவடைந்தது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடத்தில் உள்ள அவனியாபுரம் கார்த்திக் - 17 காளைகளை அடக்கியுள்ளார் - இறுதி சுற்றில் தற்போது வரை 2 காளைகளை அடக்கியுள்ளார்
கடந்த ஆண்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பைக் பரிசாக பெற்ற நிலையில் இந்த ஆண்டும் தற்போது வரை 17 காளைகளை அடக்கி சாதனையை சமன் செய்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போதுவரை 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ள மாடுபிடி வீரர் அவனியாபுரம் கார்த்தி கடந்த 2022ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கி முதல் பரிசாக கார் பரிசை பெற்றார், இதுபோன்று கடந்த 2023 ஆம் ஆண்டில் 17 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசாக பக்க பரிசாகவும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இறுதி சுற்று தொடங்கியது
9 சுற்று முடிவின்படி
- கார்த்தி, அவனியாபுரம் (G 59) - 15 காளைகள்
(கார்த்தி 2022ல் முதல் பரிசு வென்றவர்) - மாரியப்பன் ரஞ்சித், அவனியாபுரம் (G 77) - 13காளைகள்
- முரளிதரன், திருப்புவனம் (B 376) - 9 காளைகள்
- முத்துக்கிருஷ்ணன், தேனி (Y 32) - 7 காளைகள்
உள்ளிட்ட குறைந்தபட்சம் 5 காளைகளை அடக்கிய 10 வீரர்கள் மற்றும் 30 மாடுபிடி வீரர்கள் என 40 மாடுபிடி வீரர்கள் இறுதிச்சுற்றில் விளையாடவுள்ளனர்
9 சுற்று முடிவின்படி,
1) கார்த்தி, அவனியாபுரம் (G 59) - 15 காளைகள்
(கார்த்தி 2022ல் முதல் பரிசு வென்றவர்)
2) மாரியப்பன் ரஞ்சித், அவனியாபுரம் (G 77) - 13காளைகள்
3) முரளிதரன், திருப்புவனம் (B 376) - 9 காளைகள்
4) முத்துக்கிருஷ்ணன், தேனி (Y 32) - 7 காளைகள்
உள்ளிட்ட குறைந்தபட்சம் 5 காளைகளை அடக்கிய 10 வீரர்கள் மற்றும் 30 மாடுபிடி வீரர்கள் என 40 மாடுபிடி வீரர்கள் இறுதிச்சுற்றில் விளையாடவுள்ளனர்
நடிகர் வேல ராமமூர்த்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகிறார்.
சிவகங்கையை சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 8வது சுற்றில் 6 காளைகளை அடக்கியுள்ளார்.
மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர்.வினோத்குமார் காளை சிறப்பாக விளையாடி மாடுபிடி வீரர்களை மிரட்டியது - காளைக்கு அஞ்சி மாடுபிடி வீரர்கள் களத்தில் நிற்க முடியாமல் அச்சத்தில் பாதுகாப்பு கம்பிகளில் தொங்கியபடி நின்றனர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 7ம் சுற்று நிறைவடைந்து 8வது சுற்று நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 7ம் சுற்று முடிவில் 591 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
அவனியாபுரம் -UPDATE - 7 சுற்று முடிவு
7ஆம் சுற்று முடிவுகள்
*மாடுபிடி வீரர்கள்:350
*காளைகள் : 591 7ஆம் சுற்றில் 81 காளைகள
இந்த சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்கு தேர்வான சிறந்தமாடுபிடி வீரர்கள் : 2
சந்தன நிற சீருடையில்
308 3 காளைகள் - கிருஷ்ணவேல் பிரியன் - அவனியாபுரம்
344 - 2 காளைகள் - ரஞ்சித்குமார் - அவனியாபுரம்
போட்டியில் பங்கேற்ற காளைக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் 25 நிமிடத்திற்கு பின் போட்டி தொடங்கிவிட்டது - கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு போட்டி தொடங்கியது
காயம் ஏற்பட்ட காளையை நவீன கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைக்கு காயம் ஏற்பட்டு களத்திலே அமர்ந்தது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6வது சுற்று முடிவில் 510 மாடுகள் இறங்கியுள்ளது. இதுவரை 41 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டடு போட்டியில் இதுவரை 36 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 5வது சுற்று முடிந்து 6வது சுற்று விறுவிறுபபாக நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5ம் சுற்று முடிவில் மொத்தம் 425 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளது. 5ம் சுற்றில் 65 மட்டும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 6 பேர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆந்திராவில் இருந்து சிலர் தங்களது மாடுகளை அழைத்து வந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 4-ஆம் சுற்று முடிவில் மொத்தம் 360 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. 4ம் சுற்றில் 95 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 4-ஆம் சுற்று முடிவில் மொத்தம் 360 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. 4ம் சுற்றில் 95 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 19 மாடுகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க களத்தில் இறங்கிய மாடுபிடி வீரர்கள் 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய கார்த்திக் மற்றும் ரஞ்சித் இருவருக்கும் அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 11 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார்த்தி என்ற மாடுபிடி வீரர் 14 காளைகளை பிடித்து தற்போது முதலிடத்தில் உள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்றில் முத்துக்கிருஷ்ணன் 7 காளைகளை பிடித்து அசத்தியுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 2ம் சுற்றுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சுற்றில் 100 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 காளைகளை அடக்கி தேனி வீரர் தற்போது வரை முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 காளைகளை அடக்கி தேனி வீரர் தற்போது வரை முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 மாடுபிடி வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மேலும், 600 வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறி வரும் காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் களத்தில் போராடி வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பல்வேறு கட்சியை சார்ந்த தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு காண வருகை தந்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். இதனை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Background
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிகட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றது.
அதன்படி ஜனவரி 15 ஆம் தேதியான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று நடக்கும் போட்டியில் 1000 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான டோக்கன் நேற்று வழங்கப்பட்டது. இன்று காலை மாடுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காலை 7.10 மணியளவில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவனியாபுரத்தில் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்ட தூரம் வரை இருபக்கமும் தென்னை மர கட்டைகளால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -