சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரிலிருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இது மெட்ரோ பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் முன்பைக் காட்டிலும் தற்போது மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 



இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 3,343 சிசிடிவி கேமராக்களில், சுமார் 150 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள்  செயல்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பழுதாகியுள்ள கேமராக்கள் விரைவில் நீக்கப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. ஜூலை 7-ஆம் தேதி மட்டும்   இந்த ரயில்களில் 3.04 லட்சம் பேர் பயணம் செய்தனர்.



சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்  அதிகாரிகளின் தெரிவித்ததாவது, ஜூன் மாதத்தில், இந்த சேவை மொத்தம் கிட்டத்தட்ட 74.06 லட்சம் பயணிகளைக் கையாண்டது என்றனர்.  இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “ஜூலை 7ஆம் தேதி மட்டும் 3.04 லட்சம் பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தினர். சனிக்கிழமைகளில் எங்களிடம் சுமார் 2.3 லட்சம் பயணிகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை சுமார் 1.7 லட்சமாக குறைகிறது” என்று  கூறினார்.


தற்போது செயல்படும் 54 கி.மீ நெட்வொர்க்கில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ தொடர்ந்து பயணிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய, 25,000-27,000 பயணிகள் தினமும் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கிண்டி, ஆயிரம் விளக்குகள் மற்றும் திருமங்கலம் ஆகியவை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 14,000 பயணிகளைக் கையாளுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறி பேருந்து ஷேர் ஆட்டோ போன்ற சேவையை பயன்படுத்தி வாந்தர்கள் கூட தற்போது மெட்ரோ ரயிலில் பயணிக்க தொடங்கி விட்டனர்.  இதனால் மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


மேலும் படிக்க, 


EB Special Camp: உங்க மின் இணைப்பில் இருக்கும் பெயரை மாற்ற வேண்டுமா? எப்படி செய்வது? சிறப்பு முகாம்கள் எங்கே நடக்கிறது? முழு விவரம்..


Kerala Rains: கேரளாவில் தொடரும் கனமழை.. 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?