இந்திய வானிலை மையம் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும்  ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும்  விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்ணூர் பல்கலைக்கழக பிஎஸ்சி தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தென் மேற்கு பருவமழை: 


ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல மழை தருவது தென்மேற்கு பருவமழை தான். கேரளாவில் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. டெல்லி, உத்திர பிரதேசம், உத்தர்கண்ட், ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இப்படி ஒரு சூழல் இருக்க. கேரளா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது.  


எத்தனை நாட்களுக்கு மழை:


கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்குஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கேரளா மற்றும் லக்ஷ்வதீப் தீவுகளுக்கு ஜூலை 23 முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 செ.மீ முதல் 11 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 27ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:   


வங்கக்கடல் பகுதிகள்: 


24.07.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


25.07.2023:மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


26.07.2023 & 27.07.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்: 


27.07.2023 வரை: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.