தலைமை செயலாளர் இறையன்பு இன்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்பிய கடிதம் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அந்தக் கடிதத்தில் ஆளுநருக்கு நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை அளிக்க அனைத்து துறை செயலாளர்களும் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆளுநர் இவ்வாறு அறிக்கை கேட்பது தவறு என ஒரு தரப்பும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசின் செயல்பாடுகளில் ஆளுநரின் தலையீடு அவசியமற்றது என கூறிய திமுக தற்போது ஆட்சி அமைத்திருக்கும் சூழலில் அந்த அரசின் தலைமை செயலாளர் ஆளுநரிடம் எதற்காக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மற்றொரு தரப்பும் கூறிவருகிறது. 


மேலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் ஆய்வில் சீறிய திமுக தற்போது ஆளுங்கட்சியாக மாறிய பிறகு எதற்காக பம்முகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமை செயலாளர் வே. இறையன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம்  அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.


தமிழ்நாட்டுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத்  திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்


திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது   நிர்வாகத்தில் வழக்கமானதுதான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: எதிர் கட்சியாக பாய்ந்த திமுக... ஆளுங்கட்சியாக பம்மியதா...? ஆளுநருக்கு ரிப்போர்ட் தர சம்மதம்!


அறிக்கை கேட்ட ஆளுநர்; ஒப்புக்கொண்ட திமுக... கண்டனங்களும், விமர்சனங்களும்..


தர்மயுத்தம் செய்தவர், சதி வலையில் மீண்டும் விழமாட்டார்: ஆதிராஜாராமின் பரபரப்பு பேட்டி


Mullai Periyar Dam: தொல்லைகள் பல நூறு... அனைத்தையும் தாண்டிய முல்லை பெரியாறு! அணை அல்ல தென்மாவட்டத்தின் துணை!