விழுப்புரம்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 65 பேரும், 2-வது நாளில் 1,467 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து 3 ஆவது நாளாக நேற்றும் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வமுடன் சென்றனர்.
KC Veeramani: பீடி கம்பேனி நடத்திய கே.சி.வீரமணி பில்லினியர் ஆனது எப்படி..?
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 288 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,939 பேரும் ஆக மொத்தம் 2,279 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 3 நாட்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 3,811 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 650 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
தொடர்ந்து நேற்று 3ஆவது நாளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 149 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,081 பேர் என நேற்று ஒரே நாளில் 1,238 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 3 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 297 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,575 பேர் என மொத்தம் 1,888 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Thirumavalavan: அதிமுகவின் ஊழல் ஆட்சி ஊருக்கே தெரியும் - திருமாவளவன்