தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


07.04.2023 மற்றும் 08.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது /  மிதமான மழை  பெய்யக்கூடும்.


09.04.2023 மற்றும் 10.04.202:  உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


குண்டடம் (திருப்பூர்) 3, தாளவாடி (ஈரோடு), சங்கரிதுர்கம் (சேலம்) தலா 1 செ. மீ மழை பதிவாகியுள்ளது.


இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது கரூர் பரமத்தியில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி 39.5, ஈரோடு 38.8, சேலம் 38.1, திருச்சி 37.7 டிகிரி செல்சியஸ். சென்னை பொறுத்தவரை வெப்பநிலை குறைவாக இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.


அடுத்த சில தினங்களுக்கு மழை இருக்கும் என்றாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


August 16 1947 Review:ரசிகர்களை கடந்த காலத்திற்கு கடத்திச் செல்கிறதா 1947? முழு விமர்சனம்..இங்கே!


Diabetes : சர்க்கரை நோயாளியா? உங்க ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தூங்கும் முன்பு இதை செய்ங்க..


Munthiri Kaadu Review: சாதியை ஒழிக்க காதல்தான் ஒரே வழியா? என்ன சொல்ல வருகிறது முந்திரிக்காடு திரைப்படம்? விமர்சனம் இதோ