1. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலப் பிரச்னையில் தீர்வு கிடைக்கவில்லை என்பதால் விவசாய நிலத்திலேயே விவசாயி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தினை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

2. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் பறக்கும் படை சோதனை நடத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த மதுரையை சேர்ந்த வியாபாரி பழனிகுமார் (52) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.63,700-ஐ பறிமுதல் செய்தார்கள்.

 

3. தென் மாவட்டங்கள் பயன்பெறும், முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டம் 132 அடியாக உள்ளது. நீர் திறப்பு வினாடிக்கு 600 கன அடியாகவும் உள்ளது.

 



 

4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

 

5. எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் மதுரை கைதி சாவு. தலைமறைவாக இருந்த போலீஸ்காரர், ராமநாதபுரம் கோர்ட்டில் சரண். போலீஸ் நிலையத்தில் கைதி இறந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

 

6. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த தீ விபத்தில் ஒருவர் 100% தீ காயமடைந்த நிலையில், பெண் தொழிலாளி லேசான காயமடைந்தார்.

 



 

7. நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும், 3 படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

 

8. மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட 3 பேராசிரியர்களுக்கு விதித்த தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியது.

 



 

9. மதுடை மீனாட்சியம்மன் கோயில் சுற்றியுள்ள சித்திரை வீதியில் நேற்று ஸ்வாமி வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

10. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 14-வது வார்டில் போட்டியிடும் மூட்டைத்தூக்கும் தொழிலாளி பழனி தனியாளாக வாக்கு சேகரித்து வருகிறார்.