1. தமிழ்நாடு முதல்வர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னாதான கூடம், மின்தூக்கி & நாதமணி மண்டபம் ஆகியவற்றை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
2.தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றாலை இறகுகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக நேற்று கொண்டு வரப்பட்டது. துறைமுகத்தில் உள்ள அதிநவீன பளுதூக்கிகள் மூலம் இந்த காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றப்பட்டன. 142.8 மீட்டர் நீளம் கொண்ட எம்.ஒய்.எஸ்.டெஸ்நேவா என்ற கப்பலில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட 6 காற்றாலை இறகுகளும், 77.10 மீட்டர் நீளம் கொண்ட12 இறகுகளும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து கப்பல் ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றது.
3. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
4. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொலை செய்து குப்பைத் தொட்டியில் போட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட ஆண் யார் என முதற்கட்ட விசாரணையில் காவல்துறை கண்டு பிடிப்பு. 30 ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊர் திரும்பிய ஆணை சொத்திற்காக கொலை செய்யப்பட்டார என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை.
5. மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் பெயரில் அறிவிப்பு உலா வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
6. திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணையை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மனுதாரர் மற்றும் நீதிமன்றத்திற்கு வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
7. ஒருவர் தவறுசெய்ய துணைபுரிந்தால், சட்டப்படி யூ ட்யூப் நிறுவனமும் குற்றவாளிதான்" - உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
8. கொரோனா பரவல் எதிரொலியாக, மதுரை விமான நிலையத் தில் சில உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
9. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்ப டையினர் விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோந்து கப்பல் மோதியதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவரின் படகு கடலில் மூழ்கியது. 7 மீனவர் கள் மீட்கப்பட்டு கரை திரும்பினர்.
10. தமிழக மீனவர்களின் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என மதுரையில் ஜி.கே. வாசன் மதெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pongal 2022 | நகரத்தார்கள் நடத்திய செவ்வாய் பொங்கல் விழா - 60 கிடாய்களை ஒரே இரவில் வெட்டி கோலாகலம்