1. தூத்துக்குடியில் உள்ள தருவை மைதானம், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் கலந்துகொண்டு, 835 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள், ஊன்றுகோல்கள் உள்ளிட்ட உபகரணங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.

 

2. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட வர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க சுகாதாரத்துறை முடிவு 

 

3. தமிழ்நாட்டில்  ஒமிக்கிரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நெல்லை மாநகர காவல் துறையினர் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். 

 

4. மதுரை, சிவகங்கை, திண்டுக் கல், புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடை பெறுவது வழக்கம். இதற்காக காளைகளுக்கு தற்போதே நடை பயிற்சி, மண்ணை கொம்பால் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கின்றனர்.

 

 

5. சிவகங்கை மாவட்டம் முத்தூர் வாணியக்குடி ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

6. நெல்லை மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் மனமுடைந்த  சரஸ்வதி என்ற பெண் குளிர்பானத்தில் எலி மருந்து கலக்கி குடித்து அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  அவரது மகள்  காவ்யா, தாய் குடித்த எலி மருந்து கலந்த குளிர்பானத்தை தவறுதலாக குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

7. திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் மாணவி மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியுள்ளது.

 

8. திண்டுக்கல் மாவட்டம் பழனி தைபூச திருவிழாவிற்கு கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

9. மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையீடும் விவசாயிகள் அல்லாதவர்கள், வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை

 

10. மதுரை அலங்கநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட கோரி கடந்த 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். பழனிச்சாமி தலைமையில் துவங்கிய காத்திருப்பு போராட்டம் தொடர்ச்சியாக இன்று 14ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரும்பு விவசாயிகளின் போராட்டத்தில் சு. வெங்கடேசன் எம். பி-யும் கலந்து கொண்டார்.