1. காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ள, 302 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

 

2.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் எதிரே நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை சேதம். சிலையை சேதப்படுத்திய செல்லக்கிளி என்பவர் காவல் நிலையத்தில் சரன்

 

 

 

3. காஞ்சிபுரம் மாநகராட்சி, சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

 

 

4. காஞ்சிபுரத்தில் பரபரப்பாக இயங்கும் காந்தி சாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன புதுமண தம்பதிகள் மணிகண்டன் மற்றும் கீதா பிரியா காரில் இருந்து இறங்கி மருந்து வாங்கச் சென்ற பொழுது    மதுபோதையில் வேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில் புதுமணப் பெண் கீதா பிரியா பலி.  விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை.

 

 

5. வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் நேற்று சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.

 

 

6. விழுப்புரம் தள்ளு வண்டியில் இறந்து கிடந்த 4 வயது சிறுவன் குறித்து 3 மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

7. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் காலமானார்.

 

 

8. தமிழகத்தில் ஜனவரி மூன்றாம் தேதி, 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

9. துபாயிலிருந்து, சென்னை வந்த விமானத்தின் கழிப்பறையில் கிடந்த, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 447 கிராம் தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

 

10. தமிழகத்தின் கேன் குடிநீர் விலை உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேன் குடிநீர் பாட்டில் குடிநீர் ஆகியவற்றின் விலைகளை ஏற்ற குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 20 லிட்டர் கேன் குடிநீர் நிரப்ப 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. ஒரு லிட்டர், அரை லிட்டர், இரண்டு லிட்டர், 5 லிட்டர் ஆகிய குடிநீர் பாட்டில்களில் பாக்ஸ் களுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்படுகிறது.