Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 






கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், நீலகிரியின் ஓரு சில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 90மி.மீ. மழையும், தேவாலாவில் 50மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், இலங்கை கடலோர பகுதிகளிலும் மணிக்கு 45 கி.மீ. மூதல் 65 கி.மீ. தூரம் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: G20 Declaration: வரலாறு படைத்த இந்தியா.. ஜி20 உச்சி மாநாட்டின் தீர்மானம் ஒருமனதாக ஏற்பு


G20 Summit 2023: தொடங்கிய ஜி20 மாநாடு...ஒன்றுகூடிய உலக தலைவர்கள்...பரபர மீட்டிங்..!