IAS Transfer: தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்:


தமிழ்நாட்டில் அவ்வவ்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. நிர்வாக காரணங்களுக்காக இதுபோல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்நிலையில், தற்போது பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி, 



  • சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்  துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


தொடரும் நடவடிக்கைகள்:


சமீபத்தில் கூட,  மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, மதுரை, ஆவடி, கடலூர், கோவை, திண்டிவனம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.   நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் ஐ, சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக பிரவீன்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மான், கோவை மாநகராட்சி ஆணையராக எம்.சிவகுரு பிரபாகரன், மதுரை மாநகராட்சி ஆணையராக எல்.மதுபாலன்  உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டனர். அதோடு இல்லாமல், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராக எம்.பிரதாப் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Elon Musk Biopic Movie: தோல்வி முதல் வெற்றி வரை... சர்ச்சை நாயகனான எலான் மஸ்க்... பயோபிக் படத்தில் நடிக்க போவது யார் தெரியுமா..?


கல்வித்துறைக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சினை? திருப்பி அனுப்பிய மசோதாக்கள் சொல்லும் ரகசியம் என்ன?