தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டுக் நேற்று முன்தினம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.


குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. 10,000 வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 29ஆம் தேதிவரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


சென்னையில் நேற்று காலை தொடங்கி இப்போதுவரை பல இடங்களில் விடாமல் கனமழை கொட்டிவருகிறது. இதனால் சாலைகள், குடியுருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.




இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், ராமநாதபுரம், சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Today Headlines : சென்னையில் விடிய விடிய மழை.. மிதக்கும் தென் மாவட்டங்கள்.. சில முக்கியச் செய்திகள்!


Bigg Boss 5 Tamil: கமலுக்கு பதில் இவர் ; பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரெடியான ரம்யா கிருஷ்ணன்


Maradona : இதயமே இல்லாமல் தகனம் செய்யப்பட்டதா மாரடோனாவின் உடல்? மருத்துவர் சொன்ன ரகசியம் என்ன?


சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. சிறுமி உட்பட நான்கு பேர் படுகொலை.. என்ன நடக்கிறது உத்தர பிரதேசத்தில்?


Ind vs NZ, 1st Test Day 2: லாதம், யங் நிதானத்தால் நியூசி., 129/0 ; விக்கெட் எடுக்க முடியாத ஏமாற்றத்தில் இந்தியா