பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறையும், ஒடுக்கப்பட்டவர்களின் மீதான அடக்குமுறையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக நேற்று ஒரு சம்பவம் அரங்கேறியது.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் ப்ரயாக் ராஜ் பகுதியில் வசித்தவர் பூல்சந்த் பாசி. இவர் கூலி தொழிலாளியாக இருந்தவர். இந்த சூழலில் நேற்று காலை அவர் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகிய நான்கு பேர் அவர்களது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பட்டியலினத்தவர்கள் ஆவர்.


கொல்லப்படுவதற்கு முன்பு அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்தக் குடும்பத்தின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் சாதி இந்துக்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் அரசு தரப்பில் எந்தவித துரிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.






இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை பிரயாக் ராஜுக்கு சென்று பூல்சந்த் பாசியின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ குடும்பமே பயத்தில் இருக்கிறது. அவர்கள் அனைவரும் பெண்கள், ஆண் உறுப்பினர் ஜார்க்கண்டில் வேலை செய்கிறார். அவர்கள் தனியாக என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை, யாராவது வந்து அவர்களைத் துன்புறுத்தலாம். காவல்துறை அவர்களுக்கு உதவவில்லை."


குடும்பத்தில் உள்ள பெண்கள் உதவி கேட்டு சென்றபோது காவல் துறையினரால் கேலி செய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு காவல் துறை அதிகாரிகள் நேற்று இங்கிருந்து சென்றுவிட்டனர். இன்று அரசியலமைப்பு தினம். ஆனால் உத்தரப் பிரதேச அரசு அரசியலமைப்பை இம்மியளவுக்கூட கடைப்பிடிக்கவில்லை” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண