விழுப்புரம் : ஆரோவில் அருகே உள்ள கேஎஃப்சியில் சாப்பிட்ட பர்கரில் கையுறை இருந்ததைப் பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து அதனை வீடியோவாக பகிர்ந்த நிலையில் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் டேவிட் (29). இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பரும் கடந்த 5-ம் தேதி மாலை புதுவை அருகே ஆரோவில் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவுக்கடையான கேஎஃப்சியில் பர்கர் வாங்கி உள்ளனர்.






அதை சாப்பிடும் போது அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. அதை எடுத்து பார்த்த போது பிளாஸ்டிக் கையுறை என தெரிந்தது. அதை உடனடியாக ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறினர். அதற்கு டேவிட், வேண்டாம் என தெரிவித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு வீடியோ எடுத்து அனுப்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகந்தன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த புகார் எதுவும் பெறப்படவில்லை. இதே கடையில் முடி இருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட புகாரின் பேரில் அக்கடையில் ஆய்வு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளோம் என தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சைவ உணவு விடுதி ஒன்றில் பீட்ரூட் பொறியலில் எலி தலை இருந்ததையடுத்து உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்