சிவகங்கை அருகே பழமலை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள்  கொடை விழாவினை முன்னிட்டு 29 எருமை மாடுகள், 45 ஆடுகள் பலியிட்டு, ரத்தத்தை தொய்த்து வினோத வழிபாடு நிகழ்ச்சி நடத்தியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.



நரிக்குறவர் இன மக்களின் கொடை விழாவினை முன்னிட்டு காலனியின் மேற்குப் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே குடில் அமைத்து சுடலைமாடசாமி, மதுரை மீனாட்சி அம்மன், பத்ரகாளி உள்ளிட்ட தெய்வங்களுக்கு குல வழக்கப்படி எருமையும், வெள்ளாடும் பலி கொடுத்து கொடை விழா நடத்துவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக நடைபெறாத இவ்விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சிவகங்கையை பூர்விகமாக கொண்ட நரிக்குறவர் இன மக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்து குடில் அமைத்து விழாவில் பங்கேற்றனர்.




 

குல வழக்கப்படி 90 நாட்கள் அசைவ உணவு அருந்தாமல் விரதம் இருந்து இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.  தங்களது உற்றார், உறவினர்கள் அழைத்து  தெய்வங்கள்  முன்னிலையில் எருமை மாடு கிடா ஆடுகளை பலியிட்டு ரத்தத்தை அருந்துகின்றனர். எருமை வேடத்தில் பெண்களை அரக்கர்கள் துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து குலதெய்வத்திடம்  முறையிட்டதால், அவர்களை அம்மன் வதம் செய்ததை நிறைவு கூறும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. தற்போது மழை பெய்து, விவசாயம் செழித்திடவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட, நாடு நலம் பெறவும் கொடை விழா நடைபெறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவிக்கின்றனர்.




 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர