தமிழ்நாடு:
- கொரோனா பரவலை தடுக்க இன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களிலிருந்து ஆட்டோ, வாடகை கார்கள் இயக்க அனுமதி.
- நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகையை இரட்டிப்பாக அதிகரித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
- சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
- தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் சுமார் 14.29 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றால் அம்மாநில கட்டுப்பாடுகளில் அரசு தீவிரம் காட்ட உள்ளது.
- டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழா அணிவகுப்பில் மொத்தம் 21 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன
- 5 மாநில தேர்தல் பிரச்சார பேரணிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அதிகளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது.
உலகம்:
- பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.0 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- உக்ரைன் நாட்டு உடன் போர் தொடுக்க ரஷ்ய தயாராகி வருகிறது. இதற்காக ரஷ்ய போர் விமானங்கள் பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பிஏ.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஆஃப்கானிஸ்தானில் மினி பேருந்தில் குண்டு வெடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெறுகிறது.
- இந்திய அணி ஏற்கெனவே தொடரை இழந்துள்ளதால் இன்றைய போட்டியில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து-மால்விகா பன்சோத் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்