Sellur Raju : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement


தமழக அரசியல்வாதிகளில் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகுபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இவர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் புலிவாலை பிடித்தப்படி புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகுவதோடு, நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். 


செல்லூர் ராஜூ


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லூர் ராஜூ. இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். இவர் 2011ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து, 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.


வைரலாகும் புகைப்படம்


இந்நிலையில், செல்லூர் ராஜூ அவரது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு புலி வாலை பிடித்தபடி ஒரு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.






இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் புலியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதோடு இல்லாமல் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும் டிரோல் செய்தும் வருகின்றனர். 




மேலும் படிக்க


TN Budget: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்.. பொதுமக்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன? - ஓர் அலசல்


Jayakumar: மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர் ஓ.பி.எஸ். - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்