விழுப்புரம்: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அழகன்குப்பத்தில் ரூ.235 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இப்பணிகளை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மரக்காணம் பகுதி மீனவ மக்களிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில்:- இந்தியா முழுவதும் மீன்வளத்துறைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


Villupuram: ‛குத்துக்கல்லு மாதிரி இருக்காரு... அவரை போய் செத்துட்டார்னு சொல்றாங்க...’ எஸ்.பி.,யிடம் முறையிட்ட மகள்!



அதில் தமிழகத்தில் மட்டும் 31 திட்டப் பணிகளுக்கு ரூ.1,.090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. மீனவர்களின் ஏற்றுமதியை பெருக்கவும், மீன்பிடி துறைமுகங்களை நவீன மயமாக்கவும் இந்தியாவில் உள்ள 5 மீன்பிடி துறைமுகங்களை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் கொச்சின், பனாஜி, விசாகப்பட்டிணம், சென்னை காசிமேடு உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.


‛இஸ்லாமிய வாக்குகளை வாங்கிவிட்டு.. அவர்களையே கிள்ளுக்கீரையாக்குவதா’ -ராஜினாமா செய்த நிர்வாகி!


மேலும் படிக்க: Crime : காணாமல்போன பெண்.. சடலத்தை தின்ற நாய்கள்.. பதறி ஓடிய மக்கள்.. என்ன நடந்தது?


இப்படி சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களை தரம் பிரித்தல் வளாகம், மீன்களை ஏலம் விடும் வளாகம், மீன்களை பதப்படுத்தி வைக்க குளிர்சாதன வசதி, மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் மீனவர்கள் மட்டுமின்றி மீனவ பெண்களின் பொருளாதார வசதியும் மேம்படும் என்றார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண