விழுப்புரம் : அரசு பதிவேட்டில் உயிரோடு இருக்கும் தந்தை இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டதின் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் சிவரஞ்சினி (வயது 25).




இவர், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-  நான் பி.எஸ்சி. முடித்துவிட்டு செவிலியர் பயிற்சிபெற்று வருகிறேன். கடந்த 1-ந் தேதி எங்கள் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மயிலம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரம்மாள் மற்றும் ஊராட்சி தலைவர் சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வைக்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் எனது தந்தை வெங்கடேசன் இறந்து விட்டதாகவும், தாய் சரிதா விதவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனது தந்தை உயிரோடு இருக்கிறார்.


விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..


‛இஸ்லாமிய வாக்குகளை வாங்கிவிட்டு.. அவர்களையே கிள்ளுக்கீரையாக்குவதா’ -ராஜினாமா செய்த நிர்வாகி!


இதையடுத்து அந்த பட்டியலில் உள்ள தவறை திருத்தம் செய்யும்படி கூறினேன். அப்போது அங்கிருந்த கிராம முக்கியஸ்தர்கள் நீ எப்படி கேள்வி கேட்கலாம் என்று ஆபாசமாக திட்டினர். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இந்த சம்பவத்தை பார்த்தனர்.  பின்னர் இதுகுறித்து, மயிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே நான் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.


உயிரோடு இருப்பவரை எப்படி இறந்ததாக ஆவணப்படுத்தினர், எதற்காக ஆவணம் படுத்தினர், யார் இந்த தகவலை அதிகாரிகளுக்கு கொடுத்தது, என்கிற பல்வேறு கேள்விகள் எழும் நிலையில், இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தினால் தான், உண்மை நிலை தெரியவரும் என சம்மந்தப்பட்ட கிராம மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க: Crime : காணாமல்போன பெண்.. சடலத்தை தின்ற நாய்கள்.. பதறி ஓடிய மக்கள்.. என்ன நடந்தது?


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண